கோவில் திருவிழாவில் களிமண்ணில் சக்கரம் சிக்கி அச்சு முறிந்து தேர் சாய்ந்தது
குன்னம் அருகே கோவில் திருவிழாவில் களிமண்ணில் சக்கரம் சிக்கி அச்சு முறிந்து தேர் கீழே சாய்ந்தது. இந்த சம்பவத்தில் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாரியம்மன், முருகன், செல்லியம்மன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அய்யனார் உள்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் காலை 10 மணிக்கு அய்யனார், மாரியம்மன், செல்லியம்மன் ஆகிய தெய்வங்களை தனித்தனி தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் 3 சுவாமிகளின் தேர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இதில் செல்லியம்மன் எழுந்தருளிய தேர் வடக்கு தெருவில் வந்தபோது, அங்கிருந்த களிமண் மேட்டில் ஏறி இறங்கியது. அப்போது அய்யனார் கோவில் தேரின் பின்பக்க சக்கரம் களிமண்ணில் சிக்கி அச்சு முறிந்தது. இதனால் தேர் பின்னோக்கி கீழே சாய்ந்தது. இதனால் தேரில் இருந்த பூசாரி உள்ளிட்டோர் கீழே குதித்தனர். மேலும் அங்கிருந்த பக்தர்கள் வடத்தை கீழே போட்டு விட்டு அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தேர் சாய தொடங்கிய உடன் பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓடி விட்டதால், காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அய்யனார் தேர் சாய்ந்ததை தொடர்ந்து மற்ற 2 தேர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த சம்பவம் குறித்து, குன்னம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவின் போது தேர் சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story