செய்யூர் அருகே மரம் முறிந்து விழுந்து 2 பேர் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்


செய்யூர் அருகே மரம் முறிந்து விழுந்து 2 பேர் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 12 July 2017 4:20 AM IST (Updated: 12 July 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

செய்யூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது மரம் முறிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த புத்திரன் கோட்டையை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 38), சுப்பிரமணி (50), சுதர்சனன் (24). இவர்கள் 3 பேரும் புத்திரன்கோட்டையில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சூனாம்பேடு நோக்கி சென்றனர்.

கல்பட்டு கூட்டு சாலையில் செல்லும் போது சாலையோரத்தில் நின்ற ஆலமரம் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது முறிந்து விழுந்தது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

சுப்பிரமணியையும் சுதர்சனனையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சுப்பிரமணி பலியானார். படுகாயம் அடைந்த சுதர்சனன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அமல்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன், சுப்பிரமணியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆலமரம் முறிந்து விழுந்ததால் மதுராந்தகம்– சூனாம்பேடு சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story