சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சாதகமாக தி.மு.க. செயல்படுகிறது மைத்ரேயன் எம்.பி. பேட்டி


சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சாதகமாக தி.மு.க. செயல்படுகிறது மைத்ரேயன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 12 July 2017 4:29 AM IST (Updated: 12 July 2017 4:29 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சாதகமாக தி.மு.க. செயல்படுகிறது என்று மைத்ரேயன் எம்.பி. பேட்டி அளித்தார்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் வருகிற 23–ந் தேதி காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டம் காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கான இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்ய மைத்ரேயன் எம்.பி. முத்தியால்பேட்டைக்கு வருகை தந்தார்.

இடத்தை தேர்வு செய்தபின் மைத்ரேயன் எம்.பி. நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சட்டசபையில் 89 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சாதகமாக செயல்படுகிறது.

உறுதி

தி.மு.க. சட்டசபைக்கு வருவதும், வெளிநடப்பு செய்வதுமாக இருப்பது ஆளும் கட்சி மானிய கோரிக்கைகளை சுலபமாக நிறைவேற்றி கொள்ள உதவுகிறது. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 20 முதல் 30 பேர் வரை அதிருப்தியில் உள்ளனர். அதனால் எப்படியாவது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரட்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.

புரட்சித்தலைவி அம்மா அணியில் 11 எம்.எல்.ஏ.க்களும் உறுதியாக உள்ளனர். தற்போது தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. தினகரன் முதலில் தலைமை கழகத்திற்கு செல்லட்டும். பின்னர் நிர்வாகிகளை சந்திக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. பாலாஜி, வைரமுத்து, ரஞ்சித்குமார், யோகானந்தம், நீலமேகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story