‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 4:30 AM IST (Updated: 13 July 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மலைக்கோட்டை,

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, குடியரசு தலைவர் ஒப்புதலை மத்திய-மாநில அரசுகள் பெற்று தர வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

Next Story