நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 4:30 AM IST (Updated: 13 July 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி திருவாரூரில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், தி.க மாவட்ட தலைவர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், த.மு.மு.க மாவட்ட செயலாளர் பஜ்லுல் ஹக், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி ஆகியோர் தலைமை தாங்கினர். ஏழை, எளிய தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்வி, நீட் தேர்வினால் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தி.க. தலைமை பேச்சாளர் அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன், தி.மு.க. நகர செயலாளர் வாரைபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் புலிவலம்தேவா, கலியபெருமாள், ஜோதிராமன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினிசின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.க. மாவட்ட துணை தலைவர் அருண்காந்தி நன்றி கூறினார்.

இதனை தொடர்ந்து நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி தபால் கார்டுகள் மூலம் ஜனாதிபதிக்கு கடிதங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. 

Next Story