பிளேடால் வெட்டிய வாலிபர் கைது
பெண் ஆடை மாற்றுவதை எட்டிப்பார்த்ததை தட்டிக்கேட்ட தம்பியை பிளேடால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை சாகுநகர் பகுதியை சேர்ந்த 26 வயது பெண், சம்பவத்தன்று வீட்டில் ஆடை மாற்றிக்கொண்டு இருந்தார். பெண் ஆடை மாற்றுவதை அதே பகுதியை சேர்ந்த சந்த் சேக்(வயது19) என்பவர் சுவரில் இருந்த துவாரம் வழியாக எட்டிப்பார்த்தார். வாலிபர் வீட்டினுள் எட்டிப்பார்ப்பதை பார்த்து அந்த பெண் சத்தம்போட்டார். உடனே சந்த் சேக் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்தநிலையில் பெண்ணின் தம்பி சந்த் சேக்கை தட்டிக்கேட்டார். இதில், ஆத்திரமடைந்த அவர் பெண்ணின் தம்பியை பிளேடால் வெட்டினார். இந்த சம்பவம் குறித்து சாகுநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்த் சேக்கை கைது செய்தனர்.
Related Tags :
Next Story