பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் செல்வராஜ் கூறினார்.
கரூர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இருந்து கரூர் மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் இணையும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணி தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, பெரியசாமி, ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்த வேண்டும். புதிய ஊதியக்குழு பரிந்துரையை ஏற்கும் வரை இடைக்கால நிவாரண தொகையை சம்பளத்தில் 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) சென்னை கோட்டைக்கு சென்று 5-ந் தேதி எங்களின் கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்க உள்ளோம். அதன்பின்பும் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் 63 சங்கங்களை ஒன்றிணைத்து மாநில அளவிலான காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story