ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்


ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
x
தினத்தந்தி 14 July 2017 4:30 AM IST (Updated: 14 July 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்

திருச்சி,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி விஜயநிர்மலா. இந்த தம்பதியினர் ஆடுதுறையில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் ஏலச்சீட்டில் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் சேர்ந்தனர். இந்தநிலையில் இந்த நிறுவனம் குறித்து தஞ்சையை சேர்ந்த செழியன் என்பவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில், “இந்த நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும், இந்த சீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை பாதிக்கப்பட்ட பலர் சம்பந்தப்பட்ட ஏலச்சீட்டு நிறுவனம் மீது உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளித்தனர்.


Next Story