புதுச்சேரியில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி மலரும் மத்திய மந்திரி பேச்சு


புதுச்சேரியில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி மலரும் மத்திய மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 14 July 2017 5:09 AM IST (Updated: 14 July 2017 5:08 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி மலரும் என்று மத்திய இணை மந்திரி பகன்சிங் குலாஸ்தே பேசினார்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ.க. கிளை நிர்வாகிகள் கூட்டம் ஆலோசனை கூட்டம் வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொகுதி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணை தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சக்திபாலன் வரவேற்றார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பகன்சிங் குலாஸ்தே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பெண்களுக்கான காப்பீட்டு திட்டம், செல்வமகள் சிறு சேமிப்பு திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘வடமாநிலங்களில் பா.ஜ.க. வலுவாக இருப்பதுபோல் தென் மாநிலங்களில் இல்லை. இந்த நிலை விரைவில் மாறும். புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சி செய்யாவிட்டாலும், இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக நிதி வழங்கி வருகிறது. புதுச்சேரியில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி மலரும். இதற்காக கிளை நிர்வாகிகள் முதல் மாநில நிர்வாகிகள் வரை துடிப்புடன் செயல்படவேண்டும்’ என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் தெய்வசிகாமணி, கணேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பச்சையப்பன் நன்றி கூறினார்.


Next Story