சப்–கலெக்டர் அலுவலகம் முற்றுகை: மாணவர் மன்றத்தினர் 17 பேர் கைது
தமிழ்நாடு மாணவர் மன்றத்தினர் ஊர்வலமாக கோஷம் எழுப்பியபடி வந்து சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி,
தமிழ்நாடு மாணவர் மன்றத்தினர் நேற்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கோஷம் எழுப்பியபடி வந்து, சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதற்கு மாணவர் மன்ற அமைப்பாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த வளர்மதி, மற்றும் முருகன் காந்தி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன், திராவிடர் கழகத்தை சேர்ந்த அரிதாஸ், தமிழ்தேச விடுதலை இயக்கத்தை சேர்ந்த சபரீஷ் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் போலீஸ் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story