அஞ்சுகிராமம் டாஸ்மாக் கடை முன் மீண்டும் போராட்டம்– பரபரப்பு


அஞ்சுகிராமம் டாஸ்மாக் கடை முன் மீண்டும் போராட்டம்– பரபரப்பு
x
தினத்தந்தி 15 July 2017 4:22 AM IST (Updated: 15 July 2017 4:22 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சுகிராமத்தில் டாஸ்மாக் கடை முன் மீண்டும் போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை அஞ்சுகிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியில் இந்த கடை அமைந்

அஞ்சுகிரமம்,

அஞ்சுகிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியில் இந்த கடை அமைந்துள்ளதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது.

எனவே இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஏற்கனவே உண்ணாவிர போராட்டம் நடத்தினர். அதே நாளில் ஸ்ரீலட்சுமிபுரத்தை சேர்ந்த 6 பெண்கள் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்கம் சார்பில் கடையை திறக்க விடாமல் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த டாஸ்மாக் கடை முன் மீண்டும் போராட்டக்காரர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறித்ததும் கன்னியாகுமரி உதவி போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் மற்றும் அஞ்கிராமம் போலீசார் விரைந்து சென்று அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டத்தில், ஊர் கிராம முன்னேற்ற சங்க தலைவர் செல்வமணி, செயலாளர் ரத்தினசாமி, பொருளாளர் செல்லபாண்டியன், அஞ்சுகிராமம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜலிங்கம், சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், அஞ்சுகிராமம் பேரூர் தி.மு.க. செயலாளர் இளங்கோ மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Next Story