காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்


காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 July 2017 11:06 PM GMT (Updated: 2017-07-16T04:36:36+05:30)

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

காரைக்கால்,

விழாவையொட்டி அம்மாள்சத்திரம் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அருகில் உள்ள காமராஜரின் சிலைக்கு கீதாஆனந்தன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் கேசவன் ஆகுயோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் கூடுதல் கலெக்டர் மங்கலாட் தினேஷ், சமாதான கமிட்டி உறுப்பினர்கள் தெண்டாயுதபாணி பத்தர், ஆரிபு மரைக்காயர், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளியின் துணை முதல்வர் சல்மா ரகுமான் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் விஜயராணி காமராஜரின் வரலாறு குறித்து பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஆசிரியர்கள் செந்தில்முருகன், இளங்கோவன், ஜெயந்தி, நலப்பணித்திட்ட அலுவலர் விஸ்வேஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைக்கால் வட மறைக்காடு காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நாடார் உறவின்முறை சங்கம் மற்றும் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த விழாவில் சங்கத் தலைவர் மாடசாமி, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் புத்திசிகாமணி, ஜெயராமன், ஞானதேசிகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Next Story