குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
காஞ்சீபுரத்தை அடுத்த விப்பேடு பகுதியில் வசிப்பவர்கள் சங்கர் (வயது 24). கிருஷ்ணன் (55).
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த விப்பேடு பகுதியில் வசிப்பவர்கள் சங்கர் (வயது 24). கிருஷ்ணன் (55). இவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து கார் மூலம் எரிசாராயத்தை காஞ்சீபுரத்திற்கு கடத்தி வந்ததாக காஞ்சீபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்து சிறையில் அடைத்தார். அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு சிபாரிசு செய்தார். அவர் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் பொன்னையா எரிசாராயம் கடத்தி வந்தாக கைது செய்த இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story