கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 July 2017 10:00 PM GMT (Updated: 16 July 2017 8:20 PM GMT)

கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூர் இந்து முன்னணி சார்பில் கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும், கோவில்களில் அறத்தை நிலை நிறுத்தாத இந்து சமய அறநிலையத்துறையை வெளியேறக்கோரியும், நந்திவரத்தில் உள்ள நந்தீஸ்வரர் கோவில் திருக்குடமுழுக்கு விழா நடத்தவும் கோரி நேற்று நந்தீஸ்வரர் கோவில் நுழைவு வாயிலை மறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூர் தலைவர் செல்வகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதரஞ்சினி, ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பேச்சாளர் கேசவபெருமாள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தனசேகரன், உதயகுமார், முருகவேல், அழகேசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவில் பஜார் வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இந்து முன்னணி அமைப்பாளர் சி.ஆர்.ராஜா தலைமை தாங்கினார். சரவணன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், பா.ஜ.க. மாநில செயலாளர் கே.டி.ராகவன் கண்டன உரையாற்றினார்கள்.

பா.ஜ.க. காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தலைவர் குருமூர்த்தி கோட்ட அமைப்பாளர் பாஸ்கர், மணி சிறப்புரையாற்றினார்கள். முடிவில் விஸ்வாஸ் நன்றி கூறினார்.

திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் கராத்தே செல்வா தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் ஜீவா, நிர்வாகிகள் ரகுநாதன், துரைபாண்டியன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் கணேசன் கண்டன உரையாற்றினார்.

முடிவில் திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத் கன்னா நன்றி கூறினார்.


Next Story