மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்


மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 17 July 2017 3:20 AM IST (Updated: 17 July 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்ட பின் கரூர் மாவட்ட கிளையும் கலைக்கப்பட்டது. இதைதொடர்ந்து புதிய மாவட்ட கிளை அமைப்பு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் மோசஸ் தலைமையில் கரூரில் அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் மாநில பொது செயலாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்து பேசினார். மேலும் கரூர் கிளை கலைப்புக்கான காரணங்கள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து கிளையின் ஒருங்கிணைப்பாளராக மோகன் தலைமையில் காமராஜ், தமிழரசி ஆகியோர் கொண்ட அமைப்புக்குழு அமைக்கப்பட்டது. ஒன்றியம் வாரியாகவும் மாவட்ட அமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டன.

7–வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைக்கால நிவாரணம் 20 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் மயில், சரவணன், ஜான், தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story