காவிரி டெல்டாவில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி ஆர்ப்பாட்டம்
காவிரி டெல்டாவில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி திருவாரூரில் மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்,
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும், காவிரி டெல்டாவில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருவாரூரில் மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிர்வாகி செந்தில் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பாலன் முன்னிலை வகித்தார். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வக்கீல் நல்லதுரை, காவிரி உரிமைகள் மீட்புக்குழு மாவட்ட தலைவர் பாரதிச்செல்வன், நிர்வாகி கலைச்செல்வன், மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் நிர்வாகி கமல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்களை பாதிக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி டெல்டாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன