23–ந் தேதி ஆடி அமாவாசை விழா: சொரிமுத்து அய்யனார் கோவில் வளாகத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரம்


23–ந் தேதி ஆடி அமாவாசை விழா: சொரிமுத்து அய்யனார் கோவில் வளாகத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 July 2017 2:30 AM IST (Updated: 19 July 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 23–ந் தேதி ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் வளாகத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விக்கிரமசிங்கபுரம்,

வருகிற 23–ந் தேதி ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் வளாகத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆடி அமாவாசை விழா

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில்களில் நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலும் ஒன்றாகும். வருகிற 23–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இக்கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவை காண நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இங்கு கோவில் வளாகத்தில் தங்கியிருந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். கோவில் வளாகத்தில் தங்குவதற்காக பக்தர்கள் ஆங்காங்கே குடில் அமைத்து வருகின்றனர். இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆடி அமாவாசை விழாவையொட்டி புலிகள் காப்பகத்தின் வனத்துறை சட்டவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என பக்தர்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதாவது பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். உணவு சமைப்பதற்காக தவிர்க்க முடியாத நிலையில் எடுத்து வரப்படும் மசாலா பொருட்கள் பேக்கிங் கவர்களை வனப்பகுதிக்குள் போட்டுவிடாமல் அதனை பாபநாசம் சோதனை சாவடிக்கு கீழே கொண்டு வந்து நகராட்சி குப்பை தொட்டியில் போட வேண்டும்.

தற்காலிக கழிப்பறைகள்

கோவிலுக்கு வரும் வாகனங்கள் வழக்கம் போல் காலை 6 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும். வனப்பகுதிக்குள் புகை பிடிக்க கூடாது. வனப்பகுதிக்குள் வாகனங்கள் வரும் போது அதிக ஒலி எழுப்புதல் கூடாது. தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. வனம் மற்றும் வனவளங்களை பாதுகாக்க பக்தர்கள் வனத்துறையினரோடு சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்யக்கூடாது என்பதற்காக விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் மொத்தம் 400 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.


Next Story