தானேயில் பலத்த மழை 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து தரைமட்டம்


தானேயில் பலத்த மழை 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து தரைமட்டம்
x
தினத்தந்தி 20 July 2017 4:00 AM IST (Updated: 20 July 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில், 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

தானே,

தானேயில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில், 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

கனமழை

தானே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்து சென்றதை காண முடிந்தது. பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

கனமழை காரணமாக ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கட்டிடம் தரைமட்டம்

இந்த நிலையில், தானே மகாடா காலனி மகாராஷ்டிரா நகரில் இருந்த 2 அடுக்குமாடி குடியிருப்புகள் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 1995-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வந்தனர். கட்டிட மறுசீரமைப்பு பணியை கருத்தில் கொண்டு, கடந்த 2010-ம் ஆண்டிலேயே அவர்கள் கட்டிடத்தை காலி செய்து விட்டனர். இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story