காய்ச்சல் ஏற்படும்போது தாமாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் கலெக்டர் வேண்டுகோள்
காய்ச்சல் ஏற்படும்போது தாமாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில், கோட்டார் அரசு ஆயுர்வேத கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவ பிரிவு அலுவலகம், ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
பின்னர் அவர், ஆண்கள் மற்றும் பெண்கள் காய்ச்சல் வார்டுக்கு நேரடியாக சென்று நோயாளிகளை பார்வையிட்டு, டாக்டர்கள், அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (அதாவது நேற்று) நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவ பிரிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆயுர்வேத மருத்துவர் பணியில் இருப்பார். இந்த அலுவலகத்தை அணுகும் நோயாளிகளை கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து, சிகிச்சைகள் அளிக்கப்படும்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் காய்ச்சலினால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, டெங்கு காய்ச்சல் தடுப்புப்பணிகளில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி மூலம் சுமார் 1000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள், பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளுக்கு வரும் 100 பேரில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படுகிறது. அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் காய்ச்சல் ஏற்படும் போது தாமாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். அரசு மருத்துவர்களை அணுகி, அவர்கள் வழங்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவீந்திரன், மாவட்ட சித்த மருத்துவ அதிகாரிகள் எலிசா, அர்ச்சுனன், உறைவிட மருத்துவ அதிகாரி மேரி விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் வினியோக பணியாளர்கள் சுமார் 450 பேருக்கு நேற்று காலை முதல் மாலை வரை 4 டெங்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், பேரூராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமின்போது ஊராட்சி, பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள், தரைதள தொட்டிகள் போன்றவற்றை கொசு உற்பத்தியாகாமல் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?, குடிநீரில் குளோரின் எந்த அளவு கலக்க வேண்டும் என்பன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

Related Tags :
Next Story