டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

பாலக்கோடு,
பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாலக்கோடு தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் தாசில்தார் தமிழரசனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், எர்ரனஅள்ளி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். இந்த மனு மாவட்ட கலெக்டர் மற்றும் உதவி கலெக்டர் ஆகியோரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.

Related Tags :
Next Story