அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை– பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை– பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 July 2017 3:45 AM IST (Updated: 23 July 2017 10:02 PM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை– பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே உள்ள காரியாங்கோணத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது54). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 3½ கிராம் தங்க கம்மல், ரூ.9 ஆயிரம் , செல்போன், வாட்ச் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

யாரோ மர்ம நபர்கள் வீட்டின் மேல்மாடி வழியாக உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுபற்றி அந்தோணிசாமி பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story