தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது


தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 26 July 2017 8:30 PM GMT (Updated: 2017-07-26T17:54:56+05:30)

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவா

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்து இருக்கும் இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10–30மணிக்கு நடக்கிறது.

முகாமில் பல்வேறு தனியார் நிறுனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்கின்றனர். இந்த முகாமில் 10–ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள், பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் டிப்ளமோ, ஐ.டி.ஐ., படித்தவர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொள்ளலாம்.

பதிவு ரத்து ஆகாது

மேற்கண்ட தகுதி உள்ளவர்கள், தனியார் துறையில் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பயோடேட்டாவுடன் அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story