நெல்லையில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா

நெல்லையில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 27 July 2017 2:30 AM IST (Updated: 26 July 2017 8:57 PM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. துணை தலைவர் ராதாகிருஷ்ணன், எச்.எம்.எஸ். தலைவர் சுப்பிரமணியன், பணியாளர் சம்மேளனத்தின் துணைதலைவர் சந்தானம் ஆகியோர் கோரிக்கையை வற்புறுத்தி பேசினார்கள்.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13–வது சம்பள பேச்சுவார்த்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் தொ.மு.ச. தலைவர் முருகேசன், செயலாளர் அல்போன்ஸ், சி.ஐ.டி.யு. தலைவர் வின்சென்ட், செயலாளர் காமராஜ், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் குருசாமி, உலகநாதன், பணியாளர் சமமேளனத்தின் நிர்வாகிகள் குமரேசன், பிரம்மநாயகம், புதிய தமிழகம் தொழிற்சங்க செயலாளர் சந்திரன், தே.மு.தி.க. தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், சுடலைமுத்து, சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story