தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு


தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 26 July 2017 10:15 PM GMT (Updated: 26 July 2017 9:28 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் 26,232 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

சேலம்,

தேர்வு முடிவுகள் சமீபத்தில் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் 1,188 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி சேலம் மரவனேரியில் உள்ள பள்ளியில் கடந்த 2 நாட்களாக நடந்தது. நேற்று 3–வது நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி முன்னிலையில் நடந்தது. தினமும் 250 பேருக்கு 10 குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்து வருகிறார்கள்.

ஒரு குழுவுக்கு தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த பணி நாளை(வெள்ளிக்கிழமை)வரை நடக்கிறது.


Next Story