சேலத்தில் மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி


சேலத்தில் மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி
x
தினத்தந்தி 26 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-27T03:19:08+05:30)

சேலம் கல்வி மாவட்ட கிழக்கு மைய அளவில் மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி நடந்தது.

சேலம்,

சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் கல்வி மாவட்ட கிழக்கு மைய அளவில் மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் சேலம் அழகாபுரத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சாலமன்ராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். கிழக்கு மைய கொடியை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பழனியும், பள்ளிகொடியை தாளாளர் ஜான் ஜோசப்பும் ஏற்றி வைத்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நிர்மலா ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கான 600 மீட்டர், 1,500 மீட்டர், 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

600 மீட்டர் மாணவர்களுக்கான ஓட்டத்தில் முதல் 3 இடங்களை ஏற்காடு மான்ட்போர்ட் சமுதாய பள்ளியை சேர்ந்த கவுதமன், சதீஷ்குமார், தியோடர் சேவியர் ஆகியோர் பிடித்தனர். 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் 2 இடங்களை ஏற்காடு மான்ட்போர்ட் சமுதாய பள்ளியை சேர்ந்த ஹரிகுமார், ஜீவானந்தம் ஆகியோரும், 3-வது இடத்தை ஏற்காடு செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் ராமமூர்த்தியும் பெற்றார்.

19 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் முதல் 2 இடங்களை ஏற்காடு மான்ட்போர்ட் சமுதாய பள்ளியை சேர்ந்த ராமன், அருணாசலம் ஆகியோரும், 3-வது இடத்தை மான்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர் தேஜஸ் மூர்த்தியும் பெற்றனர். 5,000 மீட்டர் ஓட்டத்தில் முதல் 2 இடங்களை மான்ட்போர்ட் சமுதாய பள்ளியை சேர்ந்த தீபக்ராஜ், லட்சுமண் ஆகியோரும், 3-வது இடத்தை ஏற்காடு செயின்ட் ஜோசப் பள்ளியை சேர்ந்த விக்னேசும் பெற்றார்.

14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் 2 இடங்களை ஏற்காடு மான்ட்போர்ட் சமுதாய பள்ளியை சேர்ந்த சுதா, திவ்யா ஆகியோரும், 3-வது இடத்தை சேலம் சாரதா வித்யாலயா பள்ளி மாணவி வெங்கடேஸ்வரியும் பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் முதல் 3 இடங்களை கோகிலவாணி, மங்கையர்க்கரசி, ஈஸ்வரி ஆகியோர் பிடித்தனர்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிரியா, பிரியதர்ஷினி, ஷர்மிளா ஆகியோரும், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயத்தில் முதல் 3 இடங்களை பசுமியா, ராஜேஸ்வரி, பானுபிரியா ஆகியோர் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story