திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா


திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
x
தினத்தந்தி 26 July 2017 10:47 PM GMT (Updated: 2017-07-27T04:17:14+05:30)

திருவண்ணாமலையில், 29–ந் தேதி (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. விழாவுக்காக செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகே பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில், 29–ந் தேதி (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. விழாவுக்காக செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகே பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. விழாவில் முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘நீட்’ தேர்வு குறித்த மனு பரிசீலனையில் உள்ளது. நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க. இரு அணிகளும் விரைவில் இணையும்’ என்றார்.

ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி மோகன் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் உள்பட கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story