ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் கதிராமங்கலம் மக்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் கதிராமங்கலம் மக்களை தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) காலை சந்திக்கிறார்.
திருவாலங்காடு,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிரா மங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறு வனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேறக்கோரியும் கதிராமங்கலத்தில் அய்யனார் கோவில் தோப்பில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடி வரும் மக்களை, தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று(திங்கட்கிழமை) காலை சந்திக்கிறார். இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின், தஞ்சை மாவட்ட எல்லையான அணைக்கரைக்கு வந்தார். அப்போது அவருக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் கோவி.செழியன், அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், அண்ணாதுரை, கும்பகோணம் நகர செயலாளர் தமிழழகன், கோசி. இளங்கோவன் உள்பட திரளானோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதை தொடர்ந்து அவர் கும்ப கோணத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார். இதை முன்னிட்டு கதிராமங்கலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story