சைதாப்பேட்டையில் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.25 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியில் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.25 லட்சம் செலவில் உபகரணங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் தனது தொகுதிக்குட்பட்ட மாந்தோப்பு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னை தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள், பீரோக்கள் போன்ற உபகரணங்களை வழங்கினார்.
சைதாப்பேட்டை தொகுதியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘பசுமை சைதை’ திட்டத்தின் அடிப்படையில் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 60 மாணவிகள் பெயரில் அப்பள்ளி வளாகத்தில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சைதாப்பேட்டை மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் எம்.ஸ்ரீதரன், சைதாப்பேட்டை மா.அன்பரசன் உள்பட தி.மு.க.வினரும், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story