அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2017 4:30 AM IST (Updated: 1 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து திருமானூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டவும், தனிநபர் கழிப்பிடம் கட்டவும் மக்கள் முன்வராத நிலையில் அலுவலர்களை அரசு நிர்பந்தம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சி.பி.ராஜா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணை தலைவர் தயாளன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story