இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி,
கோர்ட்டு உத்தரவின்படி திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம், மடப்புரம் பகுதி ஆகிய 2 இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மேற்கண்ட இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி புதிய பஸ்நிலையம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நகர செயலாளர் வக்கீல் சிவசாகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரகுராமன், ஒன்றியச்செயலாளர் வேலவன், நகர துணைத்தலைவர் ஆரோக்கியதாஸ், நகர பொருளாளர் அன்புமணி, நகர துணைச்செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது திருத்துறைப்பூண்டியை மதுவில்லாத நகராட்சியாக அறிவிக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி புதிய பஸ்நிலையம், மடப்புரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுக் கடைகளை மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கோபு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story