குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
அரூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொன்னேரி அடுத்த ஈட்டியம்பட்டி பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இங்கு தண்ணீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஈட்டியம்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள அரூர் - திருவண்ணாமலை செல்லும் சாலைக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் குடிநீர் கேட்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் தாசில்தார் செல்வராஜ் மற்றும் அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story