போலீசாரை தாக்கிவிட்டு கைதி கடத்தல்: மேலும் 10 பேர் கைது

நாங்குநேரி,
நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தில் மண் அள்ளுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உதயகுமார் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் உதயகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது 3 வேன்களில் வந்த உதயகுமார் ஆதரவாளர்கள் போலீசாரை தாக்கி விட்டு, உதயகுமாரை கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாகவும் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வேன்களையும் பறிமுதல் செய்து அதன் டிரைவர்களையும் கைது செய்தனர். போலீசாரை தாக்கி விட்டு கைதியை கடத்தியது தொடர்பாக நேற்று முன்தினம் 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே நேற்று பிச்சையா, ரமேஷ், சங்கர், சண்முகத்தாய், பரமேசுவரி, சாந்தி, பாப்பா, முத்தையா, முத்துவேல், செல்வி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள். உதயகுமார் கரூர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் உதயகுமாரை தேடி கரூர் சென்றுள்ளனர்.

Related Tags :
Next Story