அரசு பஸ் டிரைவர் அடித்துக்கொலை? உறவினர்கள் சாலை மறியல்
பூதப்பாண்டி அருகே சாலையோரம் காயங்களுடன் கிடந்த அரசு பஸ் டிரைவர் இறந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அழகியபாண்டியபுரம்,
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் கீரங்குளத்தை சேர்ந்தவர் ஏசுமணி (வயது 70). இவருடைய மகன் காட்வின் (42). அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காட்வினும், ஏசுமணியும் குறத்தியறை பகுதியில் சாலையோரம் படுகாயங்களுடன் கிடந்தனர். மோட்டார் சைக்கிளும் அருகே சாய்ந்த நிலையில் கிடந்தது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் காயமடைந்திருக்கலாம் என நினைத்து இருவரையும் மீட்டு பூதப்பாண்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், காட்வின் ஏற்கனவே இறந்ததாக கூறினர். படுகாயம் அடைந்த ஏசுமணி மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார், விபத்தில் காட்வின் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே ஏசுமணி, காட்வினை சிலர் வழிமறித்து தாக்கியதாகவும், இதில் காயமடைந்த காட்வின் இறந்ததாகவும் உறவினர்களிடையே தகவல் பரவியது. மேலும் காயமடைந்த ஏசுமணியும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்று மாலை 5 மணிக்கு கடுக்கரை விலக்கு பகுதியில் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காட்வினை அடித்துக் கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி, பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் பென்சாம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், காட்வின் இறந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மேல்நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதில் சமாதானமடைந்த ஏசுமணி உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். விபத்தில் இறந்ததாக கருதப்பட்டவர், சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீர் சாலை மறியலால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story