எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி 31–வது நாளாக தொடர் முழக்க போராட்டம்


எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி 31–வது நாளாக தொடர் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:15 AM IST (Updated: 1 Aug 2017 9:22 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்னார்வ மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் தஞ்சையில் கடந்த 1–ந்தேதி முதல் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்னார்வ மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் தஞ்சையில் கடந்த 1–ந்தேதி முதல் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. 20 நாட்கள் தொடர்ந்து தஞ்சையிலும், 21–ந்தேதி திருச்சியிலும், 22–ந்தேதி புதுக்கோட்டையிலும், 23–ந்தேதி பெரம்பலூரிலும் தொடர்முழக்க போராட்டம் நடைபெற்றது. பின்னர் 24–ந்தேதி முதல் தஞ்சையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 31–வது நாள் அனைத்து அரிமா சங்கங்கள் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஹோஸ்ட் அரிமா சங்க தலைவர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார். அரிமா சங்கத்தலைவர்கள் மணிமேகலை, மணிகண்டன், சூர்யாகரன், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் அன்பரசன், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் ஆதி.நெடுஞ்செழியன், துணைத்தலைவர் திருமலை, பொதுச்செயலாளர் அக்ரி செல்வராஜ், இணைச் செயலாளர் ராமதாஸ், மக்கள் நல பேரவை தலைவர் தங்கராசன், வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் இராம.சந்திரசேகரன், எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த கலியபெருமாள் மற்றும் தன்னார்வ, பொதுநல அமைப்பை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.


Next Story