பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்டா நீர் ஆதார பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சீர்காழி,
நாகை, கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களை மத்திய-மாநில அரசுகள் பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா அகரவட்டாரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், பெருந்தோட்டம், அகரபெருந்தோட்டம், திருவெண்காடு, மணிகிராமம், மேலையூர், திருமயிலாடி, மாதானம், கூத்தியம்பேட்டை உள்ளிட்ட 20 கிராமங்களில் பெட்ரோல் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று டெல்டா நீர் ஆதார பாதுகாப்பு அமைப்பு சார்பில் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். அமைப்பின் நிர்வாகிகள் சூரியமூர்த்தி, சாமிநாதன், சமூக ஆர்வலர்கள் அங்குதன், ஸ்டாலின், குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்ளிடம் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவபிரகாசம், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இமயவரம்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அமைப்பின் தலைவர் கூறுகையில், முப்போகம் விளைந்த டெல்டா பகுதியில் தற்போது காவிரிநீர் மற்றும் மழை இல்லாமல் ஒருபோக சாகுபடிக்கே வழியின்றி விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் நாகை, கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களை தேர்வு செய்து பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்து இருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். பசுமை நிறைந்த சுற்றுப்புற சூழலை இந்த திட்டம் கெடுத்து ரசாயன காற்றை நாம் சுவாசிக்க நேரிடும். மேலும், பல்வேறு நோய்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். கடல்நீர் உட்புகுந்து நிலத்தடிநீரை மாசுபடுத்தி உப்புநீரை மட்டுமே நாம் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்படும். பெட்ரோலிய ரசாயன மண்டலம் செயல்படுத்தப்பட்டால், இன்னும் சில ஆண்டுகளில் டெல்டா மண் பாலைவனமாக காட்சி அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கும் உத்தரவை திரும்ப பெற்று, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் நெடுவாசல், கதிராமங்கலத்தை போல சீர்காழியிலும் போராட்டம் தொடர்ச்சியாக நடக்கும் என்றார்.
இதில் கழுமலையாறு பாசன விவசாய சங்க செயலாளர் ராமானுஜம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் மற்றும் விவசாயிகள், மீனவர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story