காவிரி ஆற்றில் அணுகுசாலை அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம் இளைஞர்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
மணத்தட்டை பகுதியில் காவிரி ஆற்றில் அணுகுசாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது.
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க இடம் தேர்வு செய்து லாரிகள் செல்லும் வகையில் தேவதானம் பகுதியில் அணுகு சாலை அமைக்கும் பணிகளை கடந்த மே மாதம் 30-ந் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்கு மணத்தட்டை, தேவதானம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பணிகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மணல் குவாரி அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு மற்றும் அணுகுசாலை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பொதுமக்கள் மணல் குவாரி அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் இக்கூட்டங்கள் தோல்வியிலேயே முடிவடைந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 17-ந் தேதி வதியம் காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து மணத்தட்டை பகுதிக்கு லாரிகள் செல்லும் வகையில் ஆற்றில் அணுகுசாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 24-ந் தேதி அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் மணத்தட்டை பகுதியில் மணல்குவாரி அமைப்பது தொடர்பாக கரூர் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும். அதுவரை அணுகுசாலை அமைக்கும் பணிகள் நிறுத்திவைக்கப்படுமென தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று வதியம் பகுதி வழியாக மணத்தட்டை பகுதியில் 3 பொக்லைன் எந்திரங்கள் கொண்டு காவிரி ஆற்றில் அணுகுசாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதையறிந்த மணத்தட்டை, தேவதானம், கடம்பர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வதியம் பகுதிக்கு சென்று அணுகுசாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை நிறுத்துமாறு கூறினர். மேலும் காவிரி ஆற்றில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பணி நடைபெறுவதை செல்போன் மூலம் புகைப்படம், வீடியோ எடுத்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் சிலர் செல்போன்களை வாங்கி எடுத்த புகைப்படங்களை அழித்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துகருப்பண் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து இளைஞர்கள் நிருபர்களிடம் கூறிய தாவது:-
கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை பணிகள் நிறுத்தப்படும் என கூறிவிட்டு தற்போது மறைமுகமாக அணுகுசாலை அமைக்கும் பணிகள் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குளித்தலை கோட்டாட்சியர் விமல்ராஜை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவிப்பதாக கூறினார். பின்னர் அவரே எங்களை தொடர்பு கொண்டு சாலை அமைக்கும் பணிகளை நிறுத்த சொல்லிவிட்டதாக தெரிவித்தார்.
ஆனால் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரிலேயே ஆற்றில் இருந்த 3 பொக்லைன் எந்திரங்களும் கரையோரம் நிறுத்தப்பட்டன. பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக்கூறிவிட்டு மறைமுக ஆணையின் பெயரில் அணுகுசாலை அமைக்கும் பணியினை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். மீண்டும் இதேபோல் பணிகள் மேற்கொண்டால் அனைத்து பகுதி மக்கள் சார்பில் ஆற்றில் இறங்கி மிகப்பெரிய போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொக்லைன் எந்திரங்கள் கரையோரம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story