பாரதியார் பல்கலைக்கூட ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்


பாரதியார் பல்கலைக்கூட ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 Aug 2017 3:45 AM IST (Updated: 2 Aug 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

பாரதியார் பல்கலைக்கூட ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பாலமோகனன், சிறப்பு அழைப்பாளர் ரவிச்சந்திரன், சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக ராஜராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் குமாரவேல் துணைத்தலைவராகவும், ஆரோக்கியநாதன் செயலாளராகவும், ஜெயந்தி துணை செயலாளராகவும், சுப்புராயன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

அனைத்து உதவி பேராசிரியர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; பல்கலைக்கூடத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்; பல்கலைக்கூடத்திற்கு உடனடியாக முதல்வரை நியமனம் செய்ய வேண்டும்; பல்கலைக்கூட வளாகம் பசுமையாகவும், தூய்மையாகவும் அமைய அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்; மாலை நேர வகுப்பு ஆசிரியர்களின் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story