ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அணையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அணையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆடிப்பெருக்கன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் அன்று நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடுவதையும், புதுமண தம்பதிகள் ஒன்று கூடி தாலி மாற்றி சாமியை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு நாளை (வியாழக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி அணைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி அணையில் பொதுப்பணித்துறை, காவல் துறை சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணைக்கு வரக்கூடிய பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தவும், அந்த பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர அணையில் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாரியம்மன் கோவில்களில் பூஜைகள் நடக்கின்றன.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அணையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் அன்புமணி (கிருஷ்ணகிரி தாலுகா), ஞானசேகரன் (மகராஜகடை) ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story