தனது குடும்பத்தினர் மீது போடப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் பெண் கோரிக்கை


தனது குடும்பத்தினர் மீது போடப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் பெண் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2017 4:30 AM IST (Updated: 2 Aug 2017 10:41 PM IST)
t-max-icont-min-icon

தனது குடும்பத்தினர் மீது போடப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பெண் கோரிக்கை

நாகர்கோவில்,


முளகுமூடு பாம்பு தூக்கிவிளையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(வயது 52). இவர், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக இரணியலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த என்னை பார்க்க, எனது மகன் பிரபு(30), மருமகள் கிருஷ்ணவேணியும் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள், கண்ணாட்டுவிளை அரசமூடு பகுதியில் வரும்போது டெம்போ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கிருஷ்ணவேணி இறந்துவிட்டார். ஆனால், வரதட்சணைக்காக திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாக கிருஷ்ணவேணியின் குடும்பத்தினர் என் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பான வழக்கில், கோர்ட்டில் நாங்கள் ஜாமீன் பெற்றோம்.

இதையடுத்து, மீண்டும் கிருஷ்ணவேணி குடும்பத்தினர் மார்த்தாண்டம் போலீசில் ஒரு புகார் அளித்தனர். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த எனது மகனை, தக்கலை பஸ் நிலையத்தில் வைத்து சீருடை அணியாத போலீசார் பிடித்து சென்று வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். உண்மைக்கு மாறாக பழிவாங்கும் நோக்கோடு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆகவே, எங்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது குமரி மாவட்ட பா.ஜனதா செயலாளர் ஜெயராம், தோவாளை ஒன்றிய பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் மற்றும் ராஜேஸ்வரியின் உறவினர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story