திருச்சியில் புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு
திருச்சியில் புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு
திருச்சி,
திருச்சி கருமண்டபம் சக்திநகரை சேர்ந்தவர் சீனிவாசமூர்த்தி(வயது 56) புரோகிதர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஆந்திராவுக்கு சென்று இருந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டுபோய் இருந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சீனுராமமூர்த்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story