தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் விமான நிலைய இயக்குனர் தகவல்


தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் விமான நிலைய இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2017 3:00 AM IST (Updated: 3 Aug 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி இந்திய வியாபார தொழில் சங்கம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சங்க தலைவர் ஜான்சன் வரவேற்று பேசினார். செயலாளர் கோடீசுவரன், துணைத்தலைவர் எட்வின்சாமுவேல் ஆகியோர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:–

விமான சேவை

சென்னைக்கு அடுத்தபடியாக சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து உள்ள மாநகரம் தூத்துக்குடி ஆகும். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் விமான ஓடுதளத்தின் நீளம் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும். தொடர்ந்து விமானநிலையம் தரம் உயர்த்தப்படும். விமான சரக்கு போக்குவரத்து சேவையும் தொடங்கப்படும். விமான நிலையம் தரம் உயர்த்தப்படுவதால், தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சங்க முன்னாள் தலைவர் நடராஜன், இணை செயலாளர் பொன்வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்கண்ணன் நன்றி கூறினார்.


Next Story