மாட்டுவண்டி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
ஆர்.எஸ்.மாத்தூரில் மாட்டுவண்டி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்,
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் வறட்சி காரணமாகவும், நிலத்தடிநீர் குறைந்து போனதாலும், விவசாய பணிகளுக்கு எந்திரங்களை பயன்படுத்துவ தாலும் மாட்டுவண்டிகளின் பயன்பாடு குறைந்து விட் டது. மேலும் விவசாய பணிகளுக்கு மாட்டுவண்டிகளின் பயன்பாடு குறைந்து விட்டது. இதனால் மாட்டுவண்டி வைத்திருக்கும் விவசாயிகளும், அவரது குடும்பத்தினரும் அன்றாட வருமானத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
எனவே தமிழக அரசு அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூரை அடுத்த தளவாய் அருகே உள்ள வெள்ளாற்றில் மாட்டுவண்டிகளுக்கு மணல் அள்ள அரசு குவாரி அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்து மாட்டுவண்டி விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story