வேப்பூரில் பயிர் காப்பீடு பொது சேவை மையம் தொடக்கம்

குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்திட வசதியாக 10 பொது சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வேப்பூர் மற்றும் குன்னத்தில் 2 மையங்களும் கிழப்புலியூர், சிறுமத்தூர், கீழப்பெரம்பலூர், புதுவேட்டக்குடி, காடூர் மற்றும் ஆடுதுறையில் தலா ஒரு மையமும் திறக்கப்பட்டுள்ளது. வேப்பூர் வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் சேவை மையத்தை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு காப்பீடுக்கான விண்ணப்பத்தை வழங்கி பேசுகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் பயிர் காப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது. நடப்பாண்டில் தென் மேற்கு பருவ மழை குறைவாக பெய்ததால் வறட்சியின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் முதலீட்டினை பாதுகாத்திட பயிர் காப்பீடு செய்வது மிகவும் அவசியம். அதன் படி மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு காரீப் பருவத்தில் காப்பீடு செய்ய வருகிற 15-ந்தேதி கடைசி நாளாகும். பொது சேவை மையத்தில் விவசாயிகள் சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்று, ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகலுடன் பயிர் காப்பீட்டு பிரிமியத் தொகை முறையே ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு ரூ.368 பருத்தி பயிருக்கு ரூ.1,128 ரொக்கத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். தனி விண்ணப்பம் தேவையில்லை. எனவே விவசாயிகள் பெருமளவு பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திட சேவை மையங்களின் உதவியை பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேப்பூர் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று கூறினார். இதில் துணை வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வகுமார், அய்யாசாமி, மானாவரி நில மேம்பாட்டு திட்டத்தின் குழு தலைவர் மணி, வேப்பூர் செயலாளர் ரத்தினம், மணிவண்ணன் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story