குற்றாலம் சாரல் திருவிழாவில் நாய்கள் கண்காட்சி நெல்லையை சேர்ந்த நாய், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது


குற்றாலம் சாரல் திருவிழாவில் நாய்கள் கண்காட்சி நெல்லையை சேர்ந்த நாய், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது
x
தினத்தந்தி 3 Aug 2017 3:00 AM IST (Updated: 3 Aug 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் சாரல் திருவிழாவில் நேற்று நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில் நெல்லையை சேர்ந்த நாய், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

தென்காசி,

குற்றாலம் சாரல் திருவிழாவில் நேற்று நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில் நெல்லையை சேர்ந்த நாய், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

நாய்கள் கண்காட்சி

நெல்லை மாவட்டம் குற்றாலம் சாரல் திருவிழாவின் 7–வது நாளான நேற்று மாலை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிப்பிப்பாறை, ராஜபாளையம், டாபர்மேன், ராட் வீலர், லேபர் டாப், பொமேரியன், சிட்ஜூ உள்ளிட்ட 16 வகைகளை சேர்ந்த 126 நாய்கள் பங்கேற்றன. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், முதன்மை டாக்டர் சாமுவேல் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கால்நடை டாக்டர்கள் செல்வ குத்தாலிங்கம், சிவகுமார், நாகராஜூ ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். ஒவ்வொரு வகையான நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நெல்லையை சேர்ந்த கோமதி பாலியர் என்பவருடைய சிட்ஜூ நாய் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. உள்நாட்டு நாய்களில் திருச்செந்தூர் அருகே உள்ள வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவருடைய சிப்பிப்பாறை நாய்க்கு சாம்பியன் பரிசு கிடைத்தது.

பரிசளிப்பு

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணா சிங் பரிசு வழங்கினார். சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஜெயபாலன் வாழ்த்தி பேசினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அருணாசலம் கனி நன்றி கூறினார். நாய்கள் கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.


Next Story