பாளையங்கோட்டையில் 2–வது நாளாக பெண் போலீஸ் பணிக்கு உடல்தகுதி தேர்வு
தமிழ்நாடு முழுவதும் சீருடை பணியாளர்கள் பணியான போலீஸ், சிறைத்துறை காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள், பெண் போலீஸ் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நெல்லை,
தமிழ்நாடு முழுவதும் சீருடை பணியாளர்கள் பணியான போலீஸ், சிறைத்துறை காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள், பெண் போலீஸ் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு எழுத்து தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த 27–ந் தேதி தொடங்கியது.
பெண் போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. 2–வது நாளான நேற்று உடல்தகுதி தேர்வுக்கு 411 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
அழைப்பு கடிதம் பெறப்பட்ட பெண்கள் நேற்று காலை 6 மணிக்கே மைதானம் அருகே வந்து விட்டனர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட உடல்தகுதி தேர்வு நடந்தது.