நெடுவாசலில் வாயில் துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்
வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந்தேதி முதல் 2–வது கட்டமாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
வடகாடு,
வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந்தேதி முதல் 2–வது கட்டமாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே நேற்று 113–வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் போட்டனர். இதைத்தொடர்ந்து, பலமாதங்களாக போராடிவரும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, வாயில் துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள், விசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story