மணல் குவாரிகளை அதிகப்படுத்தி குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும்


மணல் குவாரிகளை அதிகப்படுத்தி குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Aug 2017 3:45 AM IST (Updated: 3 Aug 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

மணல் குவாரிகளை அதிகப்படுத்தி குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும் என்று சோசலிச தொழிலாளர்கள் கட்டுமான அமைப்பு சாரா சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள மாவூரில் தமிழ்நாடு சோசலிச தொழிலாளர்கள் கட்டுமான அமைப்பு சாரா சங்கத்தின் திருவாரூர், நாகை மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் வரவேற்றார். மாநில தலைவர் திருநாவுக்கரசு, தமிழக தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளர் முருகையன், சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சந்திரபாபு ஆகியோர் பேசினர். கவுரவ தலைவர் சுல்தான் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஊழலை ஒழிக்க தமிழக அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆய்வின்படி 39 கோடி முறைசாரா தொழிலாளர்களை பணி வரன்முறை படுத்தி மாதம் ஊதியம் ரூ.15 ஆயிரம், சேமநல நிதி, ஓய்வூதியம், போனஸ் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். மணல் குவாரிகளை அதிகப்படுத்தி குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க சட்டம் இயற்றிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Related Tags :
Next Story