ஆரேகாலனியில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் ஆசைக்கு இணங்க மறுத்தவரை அடித்து கொன்ற கொடூரம்


ஆரேகாலனியில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் ஆசைக்கு இணங்க மறுத்தவரை அடித்து கொன்ற கொடூரம்
x
தினத்தந்தி 3 Aug 2017 3:22 AM IST (Updated: 3 Aug 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஆரேகாலனியில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில், ஆசைக்கு இணங்க மறுத்த அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 4 காவலாளிகள் கைது செய்யப்பட்டனர். பெண் உடல் மீட்பு மும்பை கோரேகாவ் கிழக்கு ஆரேகாலனி பிக்னிக் பாயிண்ட் பகுதியில் கடந்த 31–ந்தே

மும்பை,

ஆரேகாலனியில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில், ஆசைக்கு இணங்க மறுத்த அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 4 காவலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

பெண் உடல் மீட்பு

மும்பை கோரேகாவ் கிழக்கு ஆரேகாலனி பிக்னிக் பாயிண்ட் பகுதியில் கடந்த 31–ந்தேதி அன்று 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி எம்.ஐ.டி.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கொலையான பெண் அந்தேரியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் துப்புரவு பணி செய்துவந்த ‌ஷரதாபாய் என்பது தெரியவந்தது.

போலீசார் அந்த வணிக வளாகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சத்யேந்திர சிங் (வயது25) ராம்பாபு சிங், அனில்குமார் சிங் (24), ரோகித் குமார் சிங் (22) ஆகிய நான்கு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

ஆசைக்கு இணங்க அழைத்தனர்

இதில் அவர்கள் தான் ‌ஷரதாபாயை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

‌ஷரதாபாய் வேலைக்கு வரும்போதெல்லாம் சத்யேந்திர சிங் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க இணங்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் ‌ஷரதாபாய் அதற்கு சம்மதிக்கவில்லை. அவரை எச்சரித்து வந்து உள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வணிக வளாகத்தில் உள்ள குடோனை சுத்தம் செய்ய வரும்படி அழைத்து உள்ளார். இதை நம்பி ‌ஷரதாபாய் குடோனுக்கு வந்தார். அப்போது சத்யேந்திர சிங் மற்ற காவலாளிகள் 3 பேருடன் குடோனுக்கு வந்தார்.

அங்கு நான்கு பேரும் சேர்ந்து ‌ஷரதாபாயை ஆசைக்கு இணங்கும்படி அழைத்து உள்ளனர்.

4 பேர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இங்கிருந்து தப்பிக்க முயன்று உள்ளார். இதில் ஆத்திரமடைந்த காவலாளிகள் அங்கிருந்த கூர்மையான ஆயுதத்தால் அவரை தலையில் அடித்து உள்ளனர். இதில் ‌ஷரதாபாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து 4 பேரும் சேர்ந்து ‌ஷரதாபாயின் உடலை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு வந்து ஆரேகாலனியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் காவலாளிகள் 4 பேரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story