துண்டிக்கப்பட்ட தலையுடன் இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அழகு நிலைய ஊழியர் கைது


துண்டிக்கப்பட்ட தலையுடன் இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அழகு நிலைய ஊழியர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2017 3:43 AM IST (Updated: 3 Aug 2017 3:43 AM IST)
t-max-icont-min-icon

துண்டிக்கப்பட்ட தலையுடன் இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் அழகு நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

துண்டிக்கப்பட்ட தலையுடன் இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் அழகு நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண் உடல்

நவிமும்பை நெருல் பால்ம் பீச் சாலையோரத்தில் உள்ள சதுப்பு நில பகுதியில் அண்மையில் இளம்பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பைக்குள் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி என்.ஆர்.ஐ. கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் மும்பை கோவண்டி முகமது ரபீக் நகரை சேர்ந்த அப்துல் ரஹீம் சேக் என்பவரின் மகள் மரியம் (வயது22) என்பது தெரியவந்தது.

ஒரு தலை காதல்

மரியம் நவிமும்பை ஷீவுட் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்ததும், அந்த அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் இம்ரான் சல்மானி (20) என்ற வாலிபர் மரியத்தை ஒரு தலையாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் இம்ரான் சல்மானியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் தான் மரியத்தை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

விசாரணையில் மேலும் வெளியான தகவல்கள் வருமாறு:–

தன்னை காதலிக்கும்படி மரியத்தை இம்ரான் சல்மானி வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால் மரியம் மறுத்து விட்டார்.

கைது

இந்த நிலையில், மரியத்திற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையறிந்து இம்ரான் சல்மானி கடும் ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்ததும் தனியாக பேச வேண்டி உள்ளது என்று கூறி மரியத்தை அழகு நிலையத்தில் இருக்க வைத்து உள்ளார்.

அப்போதும் அவர் தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி மரியத்துடன் பயங்கர சண்டையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஆத்திரம் தலைக்கேறிய அவர் திடீரென மரியத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

உடலை மறைப்பதற்காக கத்தியால் தலையை துண்டித்து பைக்குள் அடைத்து, இரவோடு இரவாக நெருல் பகுதிக்கு சென்று உடலை வீசினார்.

இந்த தகவல்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story