உப்பள்ளி–தார்வார் மாநகர போலீஸ் கமிஷனராக எம்.என்.நாகராஜ் பொறுப்பேற்பு
உப்பள்ளி–தார்வார் மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் பாண்டுரங்க ரானே. இவர் கடந்த மாதம்(ஜூலை) 31–ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
உப்பள்ளி,
உப்பள்ளி–தார்வார் மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் பாண்டுரங்க ரானே. இவர் கடந்த மாதம்(ஜூலை) 31–ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து உப்பள்ளி–தார்வார் மாநகர போலீஸ் கமிஷனராக எம்.என்.நாகராஜை மாநில அரசு நியமனம் செய்தது.
இந்த நிலையில் நேற்று உப்பள்ளி–தார்வார் மாநகர போலீஸ் கமிஷனராக எம்.என்.நாகராஜ் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு துணை கமிஷனர் ரேணுகா வாழ்த்துக்களை தெரிவித்தார். இதையடுத்து புதிய கமிஷனர் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
இதற்கு முன்னால் கமிஷனராக இருந்த பாண்டுரங்க ரானே தனது பணியை சிறப்பாக செய்தார். அவர் விட்டு சென்ற பணிகளை நானும் சிறப்பாக செய்வேன். சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க நான் பாடுபடுவேன். உப்பள்ளி– தார்வாரில் தினமும் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. தங்கச்சங்கிலி பறிப்பதை தடுக்க ஒரு தனிக்குழு அமைக்கப்படும் என்றார்.